இலங்கை இந்திய வல்லாதிக்க அரசாங்கங்களுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, 12 நாட்களின் பின்னர் வீரச்சாவைத் தழுவிய தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம் இன்றாகும் (26/09/2022).

ஐந்து அம்ச கோரிக்கைகளாவன,
1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2) சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.