யாழ் செயலகத்தில் குழப்பம், விசேட அதிரடிப்படையுடன் வந்த சுமந்திரன்

யாழில் நாடாளுமன்ற தேர்தல் சுமூகமாக முடிவடைந்து, வாக்குகளும் எண்ணப்பட்டு, விருப்பு வாக்கு எண்ணும்போது பெரும் குழறுபடிகள் நிகழ்ந்துள்ளது.

இம்முறை தேர்தலில் பாரிய சரிவைச் சந்தித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான சுமந்திரன், விருப்பு வாக்கில் மிகவும் பின்தங்கியிருந்தபோதும், இறுதி நேரத்தில் முன்னுக்கு கொண்டுவரப்பட்டமையால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.

பெற்ற வாக்குகளின்படி திருமதி ரவிராஜ் இரண்டாம் நிலையில் இருந்துள்ளார். மூன்றாம் இடத்தில் சித்தார்த்தன் இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் ஏற்கனவே வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.https://www.facebook.com/praviinaa.raviraj/posts/4303772706331440

https://www.facebook.com/praviinaa.raviraj/posts/4303772706331440


இருப்பினும் இறுதி நேரத்தில் திருமதி ரவிராஜ் தோல்வி என சொல்லி வெளியேற்றப்பட்டுள்ளார்.

யாழ் அரச அதிபரினால், அறிவிக்கப்பட்டுள்ள விருப்பு வாக்குளின் விபரம்,

1- அங்கஜன் இராமநாதன் – 36,356
2- சிறிதரன் – 35,884
3- டக்ளஸ் தேவானந்தா – 32,146
4- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – 31,658
5- சுமந்திரன் – 27,834
6- செ.கஜேந்திரன் – 24,794
7- சித்தார்த்தன் – 23,840
8- திருமதி ச.ரவிராஜ் – 23,098
9- வி.மணிவண்ணன் – 22,741
10- சி.வி.விக்னேஸ்வரன் – 21,554
11- க.சுகாஷ் – 21,463
12- ஈ.சரவணபவன் – 20,358
13- மாவை சேனாதிராஜா – 20,292
14- கஜதீபன் – 19,058
15- ஆனோல்ட் – 15,386

Latest articles

Similar articles