இதுவரை 39 தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அதீத விலை உயர்வு என்பன பல குடும்பங்களை பட்டினிபோடும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்நிலையில், இதுவரை 39 தமிழ் மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்குச் சென்றுள்ளதாக இந்தியப் பத்திரிகை ஹிந்து தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐந்து குடும்பங்களைச் சேர்த 19பேர் படகு மூலம் தனுஷ்கோடியைச் சென்றடைந்துள்ளனர். அவர்கள் கடந்த நான்கு ஐந்து நாட்களான உண்ண உணவின்றி தவித்ததாக தமிழ்நாட்டு காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து பலர் இந்தியாவில் தஞ்சம் புகுவார்கள் என்ற அச்சத்தில், இந்திய அரசாங்கம் கரையோர பாதுகாப்பை பலப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles