அரசியலமைப்பிற்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைக் கண்டித்து, தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு டிசம்பர் 7ம் திகதிவரை இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இன்றைய தீர்ப்பு தொடர்பாக ரணில் விக்ரமசிங்க கூறுகையில், மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.
மேல் நீதிமன்றின் தீர்ப்பினால் பாராளுமன்றம் கூடுவதற்குரிய முயற்சிகளை சபாநாயகர் கரு ஜெயசூரியா உடனடியாக மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் விடுதலை முன்னணி (JVP ) இன்று இரவு 7 மணியளவில் சபாநாயகரை சந்தித்து, பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குரிய வேண்டுகோளை விடுக்க இருக்கிறது.