இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் மே மாதம் 6ம் திகதி ஆரம்பமாகும் என தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 29ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.