தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகள் தவறான பாதையில் வழிநடத்துகிறார்கள் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா நேற்று (10/11) யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி பல விடயங்களைப் பகிர்ந்திருந்தார்.
முந்தைய தேர்தலுடன் ஒப்பிடும்போது, கடந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்கு கிடைத்த 27,000 வாக்குகளை எனது முதல் வெற்றியாக நான் பார்க்கிறேன். நான் மக்களை குறை கூறவில்லை, ஏனெனில் தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகள்தான் தவறான பாதையில் வழிநடத்துகிறார்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சி தலைவருக்கும், முன்னைய ஜனாதிபதிக்கும் வாக்களிக்குமாறு யாழ் மக்களை கேட்ட அதே அரசியல்வாதிகள், இந்த தேர்தலில் அந்த கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம், ஏனெனில் அவை தெற்கு கட்சிகள் என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, மக்களை தவறாக வழிநடத்திச் செல்கின்றனர் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இராணுவ ஆக்கிரமிப்பு காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் – ஜனாதிபதி