மன்னார் மனிதப் புதைகுழியின் ஆய்வறிக்கை மர்மம், பின்னணியில் தொல்பொருள் திணைக்களம் !!!

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் வரும் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக மன்னார் மாவட்ட சிறப்பு சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த பாரிய மனித புதைகுழியிலிருந்து 30 சிறுவர்களின் மனித எச்சங்கள் உட்பட, 343 மனித எச்சங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை தொல்பொருள் திணைக்களமும் மன்னார் மனித புதைகுழியிலிருந்து பெறப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக ஆய்வுகளை நடத்தியுள்ளது. இருப்பினும் அவற்றின் அறிக்கையை வெளியிடுவதில் அத்திணைக்களம் இழுத்தடிப்பு செய்கின்றது.

தொல்பொருள் திணைக்களம் தமக்கு மூன்று மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளதால், மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் வரும் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்காவில் பெறப்பட்ட அறிக்கை என்ற ஒரு நம்பக்கத்தன்மையற்ற அறிக்கையை வெளியிட்டு, திசைதிருப்பும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றதோ என்னும் நிலமை காணப்படும் இவ்வேளையில், தொல்பொருள் திணைக்களத்தின் இழுத்தடிப்பு மேலும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.


Latest articles

Similar articles