கொக்குவிலில் 90 பேர் கொண்ட வாள்வெட்டுக்குழுவை சுற்றிவளைத்த பொதுமக்கள்

கொக்குவில் பகுதியில் பட்டப்பகலில் வன்முறையில் ஈடுபடவந்த வாள்வெட்டுக் குழுவை ஊர் மக்கள் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.

சுமார் 30 மோட்டார் சைக்கிள்களில் வந்த 90 வரையிலான இளைஞர்களையே பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். இருப்பினும் 4 பேர் மட்டுமே பிடிபட்டுள்ளதுடன், 7 மோட்டார் சைக்கிள்களையும் பொது மக்கள் கைப்பற்றியுள்ளனர்.

பிடிபட்டவர்களையும், மோட்டார் சைக்கிள்களையும் மக்கள் யாழ் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இங்கே கவனிக்கப்படவேண்டிய முக்கிய விடயம், 30 மோட்டார் சைக்கிள்களில்  90 பேர் வரையில், அதுவும் பட்டப்பகலில் ஒன்றாக வருகிறார்கள் என்றால், வாள்வெட்டுக் குழுவினர் அசாதாரண வளர்ச்சியடைந்துள்ளனர் என்றே புலப்படுகிறது.

இது தொடர்பாக காவல்துறையின் பாதுகாப்புடன் வலம் வரும் யாழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை!! 

சாதாரண பொதுமக்களால் எதுவும் செய்யமுடியாது என்ற அதீத நம்பிக்கையிலேயே, சில நூறு காவலிகளை இலங்கை புலனாய்வுப் பிரிவு யாழில் வளர்த்து வருகிறது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles