வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக 45,000 பேருக்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

உடனடி நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் இலங்கை கடற்படையின் ஆறு டிங்கி படகுகள் மீட்புப்பணியிலும், விமானப்படையின் Y -12 விமானம் மற்றும் பெல் 212 உலங்கு வானூர்தி என்பன வெள்ள நிலமையை அளவிடும் பணியியிலும் ஈடுபடுத்தப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.