காதர் மஸ்தான் இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராக கடந்த செவ்வாய்க்கிழமை (12/06) பதவியேற்றிருந்தார்.

இந்நிலையில் ஒரு இஸ்லாமியர் இந்து மத விவகாரங்களுக்கு பிரதி அமைச்சராக இருப்பது பொருத்தமற்றது என பலதரப்பிலும் எதிர்ப்புகள் கிழம்பியதால், காதர் மஸ்தான் ஜனாதிபதியை தொடர்புகொண்டு தனது அமைச்சுப் பதவியிலிருந்து இந்து மத விவகார அலுவல்கள் பகுதியை தனது நீக்குமாறு கேட்டிருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இந்து மத விவகார அலுவல்கள் அமைச்சிலிருந்து காதர் மஸ்தானை நீக்கியுள்ளார், இந்த தகவலை பிரதி அமைச்சர் காதர் மஸ்தானை தனது முகநூல் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சமூகத்தில் தேவையற்ற கருத்துக்கள் உருவாவதை தவிப்பதற்காக, பதவிக்கு அப்பாற்பட்டு, சிறப்பான ஒரு அரசியலை பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மேற்கொண்டுள்ளார் என்பது வரவேற்கதக்க விடயமாகும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles