இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் நியமனம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராக இன்று (12/06) பதவியேற்றுள்ளார்.

இந்து மத விவகாரங்களுக்கு இஸ்லாமியர் ஒருவரை பிரதி அமைச்சராக நியமித்ததின் பின்னணி குறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும். இருப்பினும் இது ஒரு சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட செயல் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

அதாவது இந்து முஸ்லிம் மக்களிடையே இருக்கின்ற நல் உறவை சீர்குலைப்பதற்கான ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

மஹிந்த ஆட்சியில், சிங்கள – இஸ்லாமியர்களிடையே இன ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பல சம்பவங்கள் வெளிப்படையாகவே நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோன்று நடப்பு நல்லாட்சி அரசிலும் கண்டியில் பாரிய கலவரம் இஸ்லாமியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது.

மேற்படி சம்பவங்கள் சிங்கள-முஸ்லிம் மக்களிடையேயான ஒரு பிரச்சனையாகவே இருந்தது. இந்த பிரச்சனையை இந்து-முஸ்லிம் பிரச்சினையாக மாற்றுவதே தற்போது உள்ள அரசின் திட்டமாகும். தற்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானை இந்து மத விவகார அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமித்ததின் பின்னணி குறித்து மக்கள் அவதானமாக ஆராயவேண்டும்.

இந்த நியமனம் குறித்து ஏற்கனவே பாராளுமன்ற காதர் மஸ்தான் அறிந்திருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. இருப்பினும் இந்த அமைச்சு பதவியை துறந்து, இந்து முஸ்லிம் மக்களின் உறவை சீர்குலைக்கும் சிங்கள அரசின் திட்டத்திற்கு காதர் மஸ்தான் தக்க பதிலடி கொடுக்க வேண்டியதே இப்போதுள்ள உடனடித் தேவையாகும்.

Latest articles

Similar articles