யாழ் மேயர் உட்பட தமிழரசுக் கட்சியின் மூவருக்கு உயிராபத்து !!!

யாழ் மேயர் இ.ஆர்னோல்ட் உட்பட மிழரசுக் கட்சியின் மூவருக்கு உயிராபத்து உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இலங்கை காவல்துறை மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன், உரிய பாதுகாப்பை வழங்கும்படியும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக சுமந்திரன் காவல்துறை மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில், என்னைக் கொள்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளதாக பத்திரிகைகள் மூலமாக அறிந்துள்ளேன்.

மேலும் கடந்தவாரம் யாழ் மேயர் இ.ஆர்னோல்ட்க்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அக்கடிதத்தில் நானும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரான சயந்தனும் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் இலக்கு வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே எம் மூவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு சுமந்திரன் அவர்கள் காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles