இரணைமடு குளத்தின் முகாமைத்துவம் தொடர்பில் விசாரனை

இரணைமடு குளத்தின் முகாமைத்துவம் தொடர்பில் விசாரனை செய்வதற்கு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளார்.

கடந்த 21ம் திகதி பெய்த கடும் மழையின் காரணமாக இரணைமடுகுளத்தின் 14  வான்கதவுகள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டிருந்தது. இதனால் குளத்தினை அண்டிய பல கிராமங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பெய்துகொண்டிருந்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்துடன், குளத்திலிருந்து வெளியேறிய நீரும் சேர்ந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தது.

நீர் முகாமைத்துவம் தொடர்பாக அதிகாரிகளின் அசமந்தப் போக்கா அல்லது போதிய அறிவின்மையா காரணம் என கண்டறியப்படவேண்டும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles