ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் அமைச்சரவை அந்தஸ்துள்ள கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தனது கட்சியிலேயே போட்டியிட்டு, 32,146 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருந்தார்.

மேலும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.