இலங்கையில் இரண்டாவது மரணம்

இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கத்தினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் அரச மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு குறித்த நபருக்கு நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுரையீரல் பாதிப்பு மற்றும் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டிருந்த நபர் பின்னர் உயிரழந்துள்ளார். இதுவரையில் இலங்கையில் 122 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதுடன், இருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles