கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 569 ஆக உயர்வு

கம்பஹா மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை 569ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

தொழிற்சாலை ஊழியர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் பல தொழிலாளர்கள் விடுமுறையில் சென்றுள்ளதால் நிலமை சற்று மோசமடையலாம் என அஞ்சப்படுகிறது.

கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் தென்படுவதாக கருதுபவர்கள், உடனடியாக வைத்தியசாலைக்கு தனிப்பட்ட வாகனத்தில் சென்று பரிசோதனையை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இருப்பினும் இதுவரையில் நாடு தழுவிய ஊரடங்கு சட்டத்திற்கு சாத்தியமில்லை எனவும் மக்கள் தேவையில்லாமல் அஞ்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles