ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 4:0 என்றரீதியில் கைப்பற்றியுள்ளது.
Embed from Getty Images

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரூட் 83 ஓட்டங்களையும், மாலன் 62 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆஸ்திரேலிய பந்து வீச்சில், P.J.கம்மின்ஸ் 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
 Embed from Getty Images

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கட்டுக்களை இழந்து 649 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டதது. இதில் க்வாஜா 171 ஓட்டங்களையும், சகோதரர்களான M.மார்ஷ் மற்றும் S.E மார்ஷ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி முறையே 101 மற்றும் 156 ஓட்டங்களைப் பெற்றனர்.

இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சிற்கு முகம் குடுக்க முடியாமல் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெறும் 180 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் P.J.கம்மின்ஸ் மீண்டும் நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக இரண்டு இன்னிங்சிலும் தலா நான்கு விக்கட்டுகளை வீழ்த்திய P.J.கம்மின்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *