இலங்கையின் வட மாகாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

370mm வரை பெய்துள்ள கடும் மழையினால், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து குளங்களும் வான் பயகின்றது. இரணைமடுக் குளத்தின் 14 வான்கதவுகளில், 11 வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் கடும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சில குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.