இறுதி யுத்தத்தில் 8 ஆயிரம் பேர் உயிரிழப்பு மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை – மஹிந்த

2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் எட்டு ஆயிரத்திற்கும் குறைவானவர்களே உயிரிழந்தனர் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச டில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த எட்டாயிரம் பேரில் விடுதலைப்புலிகளும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (அப்படியாயின் ஐக்கிய நாடுகள் சபை சொல்ற கணக்கு ???)

மேலும் யுத்தம் விடுதலைப் புலிகளுக்கெதிராகவே நடைபெற்றது. தமிழ் இன மக்களுக்கு எதிராக அல்ல எனவும் குறிப்பிட்டார்.

மஹிந்தவின் நெருங்கிய தமிழ்த் தோழனும், இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்திவரும் நபருமான சுப்பிரமணிய சுவாமியின் அழைப்பின் பேரில் டில்லி சென்றுள்ள மஹிந்த அங்கு பல அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles