இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த 24kg தங்கம் மீட்பு, மூவர் கைது

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு 24.2kg நிறையுடைய 242 தங்க கட்டிகளை கடத்த முற்பட்ட மூவரை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும், கைப்பற்றப்பட்ட தங்கமும் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாண சுங்க பிரிவினரிடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 170 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles