யாழிலிருந்து கொழும்பு சென்ற வாகனத்தில் 220kg கஞ்சா மீட்பு

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனத்தில் இருந்து 220kg கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த வாகனம் சிலாபம் பகுதியில் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோதே மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தில் இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் யாழ் நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில், கடத்தலுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர் வேறு வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

தொடர்புபட்ட செய்திகள்
Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles