யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி, இந்த மர்ம காய்ச்சலின் அறிகுறிகள் எலிக்காய்ச்சலுக்கு ஒப்பான அறிகுறிகளாகக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதனை உறுதி செய்ய, இரத்த மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.