35 வயதிற்கு குறைவானவர்கள் முச்சக்கர வண்டி ஓட்ட முடியாது !!

இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் ஆகக் குறைந்த வயது 35 ஆக இருக்க வேண்டும் எனும் நடைமுறை இந்த வருட இறுதிக்குள் அமுல்படுத்தப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

இதற்கான பேச்சுவார்த்தை முச்சக்கர வண்டி ஓட்டுனர் சங்கத்துடன் இடம்பெறுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் பெருமளவு 35 வயதிற்கும் குறைவான முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த புதிய நடைமுறையை அமுல்படுத்துவது எந்தளவு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles