தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால், வடக்கு கிழக்கு மக்ககளின் பொருளாதாரம் பாதிப்பு

அரசியல் தீர்வின் பின்னர்தான் பொருளாதார முன்னேற்றம் பற்றி சிந்திக்க முடியுமென்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதால், வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றமின்றி இருக்கின்றது என அமைச்சர் மனோ கணேசன் கிளிநொச்சியில் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவை. ஆனால், அந்த அதிகாரப் பகிர்வு கிடைக்கும்வரை, நாம் பொருளாதார நன்மைகளைப் பெறாது இருக்க முடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த நகர்வால், வடக்கு, கிழக்கு மக்களுக்கு வேலை வாய்ப்பு, வாழ்வாதார உதவிகள், உட்கட்டமைப்பு வசதிகள் என்பன கிடைக்கப்பெறாமல் உள்ளது. என்று தெரிவித்தார்.

தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் தலைவர்கள், அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றிவிட்டு, வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கவில்லை. அவர்கள், தங்களுக்கு கிடைத்த பதவிகளைப் பெற்று, தங்கள் மக்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிவித்த மனோ கணேசன், அவ்வாறே மலையகத்திலும் நடைபெறுகின்றது என்று குறிப்பிட்டார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles