ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த குடும்பஸ்தர் தற்கொலை

ஆஸ்திரேலியா நாட்டிற்கு புகலிடம் கோரி வந்த, வவுனியா கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அகதி அந்தஸ்து கிடைக்காமல் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்த வசந்தகுமார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருந்தார். இதனால் அவரது மூளைச் சாவு அடைந்த நிலையில், செயற்கை சுவாசம் வழங்கப்பட்டிருந்தது.

மருத்துவரீதியில் தொடர்ந்தும் செயற்கை சுவாசம் வழங்குவதில் பலனில்லை என்பதை உணர்ந்த வைத்தியர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை (26/08) செயற்கை சுவாசம் வழங்குவதை நிறுத்தினர்.

மரணமடைந்த வசந்தகுமார் நான்கு பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles