சம்பந்தன் தலைமையில் தமிழ் கட்சிகளின் முக்கிய சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் கட்சிகளுக்கிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று(15/11) மாலை 5.30 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளது.

சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பான கலந்துரையாடலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனின் வயதினைக் கருத்திற்கொன்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவி தொடர்பாக முடிவுகள் ஏதும் எடுக்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles