சிட்னியில் தொடரூந்து முன் பாய்ந்து தமிழ் இளைஞன் தற்கொலை

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்த தமிழ் இளைஞன் ஒருவர் தொடரூந்தின் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் சேரந்த 36 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

நான்கு வருடங்களாக அகதி அந்தஸ்து கிடைப்பதற்காக முயற்சி செய்தும், இவரது கோரிக்கையை ஆஸ்திரேலிய அரசு இரு தடவைகள் நிராகரித்துள்ளது. இதன்மூலம் ஏற்பட்ட மன உளைச்சலாலேயே இவர் இவ்வாறான துரதிஷ்டவசமான முடிவை எடுத்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படமாட்டாது என ஆஸ்திரேலிய அரசு தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles