இலங்கை பாராளுமன்றம் கலைப்பட்டது. ஏப்ரல் 25 தேர்தல்

இலங்கை பாராளுமன்றம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் நள்ளிரவு கலைக்கப்பட்டது. இதற்கான அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் வரும் ஏப்ரல் 25 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கான வேட்புமனுக்கள் வரும் மார்ச் மாதம் 12ம் திகதி தொடக்கம் 19ம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அதிவிஷேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் இந்த தேர்தலில், பொதுஜன பெரமுன வெற்றி பெறும் படசத்தில், அரசியல் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி சீனா, ரஷ்யா போன்று, தனி ஒருவர் அல்லது ஒரு குடும்பத்தின் கீழ் இலங்கை ஆயுள்வரைக்கும் ஆழப்படும் ஒரு ஆபத்தான சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது.

மேலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை அனைவரும் அறிவோம். அதேபோன்று வரும் பொதுத் தேர்தலிலும் சிங்கள மக்களின் முடிவு ஒரு மித்ததாக இருப்பின், சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலம் இலங்கையில் கேள்விக்குறியாகும் என்பது திண்ணம்.

பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான வர்த்தமானியை பார்வையிட.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles