இலங்கை தேசியயக்கொடியில் புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்ட பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள்

நேற்று (11/08) நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் அக்கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்டார்.

அவரின் பின்னால் வைக்கப்பட்டிருந்த இலங்கை தேசிய கொடிகளில் சிறுபான்மை இனத்தவர்களை பிரதிபலிக்கும் நிறங்களான பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்டிருந்தன.



தேசிய கொடிகளை சரிவாக காட்சிப்படுத்தியன்மூலம் பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறங்கள் மறைக்கப்பட்டிருந்தன.

சிங்கள பேரினவாதிகளை சாந்தப்படுத்தும்வகையில் இவ்வாறு இடம்பெற்றதா என பாரிய சந்தேகம் ஏற்படுகிறது !!!

கொழும்பில் நடைபெறும் மாபெரும் மாநாடு, மகிந்த தலைவராக பதவியேற்கிறார், கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிமுகம் செய்யப்படுகிறார். எனவே இப்படியான ஒரு மாநாட்டில் தனி சிங்கக் கொடியை பாவித்தால், பலவிதமான எதிர்க் கருத்துக்கள் ஆரம்பத்திலேயே கிளம்பலாம்.

ஆகவே அதையும் சமாளித்து, சிங்கள பேரினவாதிகளையும் சாந்தப்படுத்தும்வகையில் இவ்வாறு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் ஏற்படுகிறது.

கடந்தகாலங்களில் சிங்கள பேரினவாதிகளினால் நடத்தப்பட்ட பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் இவ்வாறான சிங்க கொடிகள் பாவிக்கப்பட்டிருந்தன. பலர் இதை ஆட்சியிலுள்ளவர்களுக்கு தெரியப்படுத்தியபோதும், ரணிலோ, மைத்திரியோ இதனை பெரிதாகக் கணக்கெடுக்கவில்லை.(அவர்களுக்கும் சிறுபான்மையினரில் அக்கறை இருந்தால்தானே!!)

சிங்கள பேரினவாதிகளினால் உருவாக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் ஒரு மாநாட்டிலேயே இப்படியெனில், அவர்கள் ஆட்சிக்குவந்தால் எப்படியிருக்குமென்பதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.

Latest articles

Similar articles