கோத்தபாய ஒரு நேரடியான இனப்படுகொலையாளி – பா.உ.ஸ்ரீதரன்

வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள இனவாத கட்சியான பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச ஒரு நேரடியான இனப்படுகொலையாளி என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் மேற்கொண்ட இனப்படுகொலைகளுக்கு அடுத்ததாக, இந்த பூமியில் மிகப்பெரிய இனப்படுகொலைகளை மேற்கொண்டவராக கோத்தபாய ராஜபக்ச காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நன்றி : ஆதவன் தொலைக்காட்சி

நான்கு வருடங்களுட்க்கு மேலாக ரணில்-மைத்திரி தலைமையிலான நல்லாட்சிக்கு முண்டுகொடுத்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, முன்னாள் ஆட்சியாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும்படி எந்தவொரு அழுத்தங்களையும் கொடுத்திருக்கவில்லை.

‘கண் கெட்ட பின், சூரிய நமஸ்காரம்’ என்பதுபோல், காலம் கடந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராவது இப்படி வெளிப்படையாகக் பேசியுள்ளமை எந்தளவிற்கு தமிழ் மக்கள் மனதில் பதியப்போகின்றதென்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles