இலங்கை மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 14வயதுடைய பாத்திமா நதா என்ற பாடசாலை மாணவி இலங்கை பிரதமருக்கு மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார்.

காத்தான்குடியிலிருந்து தலைநகர் கொழும்பிற்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்த இந்த மாணவி, பிரதமர் ஹரிணி அமரசூரியாவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார்.
இளம் தலைமுறையினரை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகவும், அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்குமான உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்திய மகஜரையே பிரதமரிடம் பாத்திமா நதா கையளித்தார்.