சாய்ந்தமருது முற்றுகையில் 6 சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு, இருவர் தப்பியோட்டம்

கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மறைவிடமொன்றை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டபோது இருபகுதினருக்குமிடையில் துப்பாக்கி சமர் இடம்பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து வீட்டினுள் இருந்தவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்கோ, விசேட அதிரடிப்படியினருக்கோ எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற வீட்டினுள் மூன்று ஆண்கள் (தற்கொலைதாரிகள் என நம்பப்படுபவர்கள்), மூன்று பெண்கள் மற்றும் ஆறு சிறுவர்களின் சடலங்களையும், வீட்டின் வெளியே மூன்று ஆண்களின் சடலங்களையும் காவல்துறையினர் மீட்டு கல்முனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.


Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles