யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் பல்வேறு தேவைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
வடபகுதி மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில், ஜனாதிபதியுடன் யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் இளங்குமரன் உட்பட பல வேட்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.