பனங்கள்ளு ஏற்றுமதி, $45,000 வருமானம்

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பனங்கள்ளு மூலம் 45,000 அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் வட மாகணத்திலிருந்து பெறப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள்ளு, முதன் முதலாக (f)பிரான்சிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமே 45,000 அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைக்கப்பெற்றுள்ளது.

தற்போது அமெரிக்கா, கனடா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளுக்கு அதிகளவு பனங்கள்ளு ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவித்துள்ள பனை அபிவிருத்திச் சபை, கனடா நாட்டிற்கே அதிகளவு பனங்கள்ளு ஏற்றுமதி செய்யப்படுவதாவும் தெரிவித்துள்ளது.

கற்பக தருவான பனை மரங்கள், இலங்கையின் வட மாகாணத்திலேயே அதிகளவில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles