நல்லூர் முருகனின் கொடியேற்ற நேரடி ஒளிபரப்பு

கொரோனா வைரசின் பரவலால் நல்லூர் முருகனின் கொடியேற்ற நிகழ்விற்கு வழமைபோல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு ஆலய நிர்வாகம் மக்களை ஆலயத்திற்கு வருவதனைத் தவிர்த்து, கொடியேற்ற நிகழ்வின் நேரடி ஒளிபரப்பினை வீட்டிலிருந்தே கண்டுகளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நல்லூர் ஆலயத்தின் கொடியேற்ற மகோற்சவத்தின் நேரடி ஒளிபரப்பை, ஆலயத்தின் உத்தியோகபூர்வ YouTube தளத்தில் இன்று (25/07) காலை இலங்கை நேரம் 09:15மணிமுதல் 10:30மணிவரை பக்தர்கள் பார்த்து முருகனின் தரிசனம் பெறலாம்.

இணைப்பு : shorturl.at/amMST

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles