பிள்ளையார் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை திறப்பு

முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பிரம்மாண்ட புத்தர்சிலை நேற்று (23/01) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறவிருந்த பொங்கல் விழாவை பிக்கு தடுத்தமை தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வரும் நிலையில், குறித்த பிக்கு இன்று (24/01) நீதிமாற்றில் ஆஜராகவேண்டியுள்ளநிலையில், அவசர அவசரமாக நேற்றே பிரம்மாண்ட புத்தர்சிலையை திறந்து வைத்துள்ளனர்.

ஒரு சமய வழிபாட்டுத்தலம் அமைப்பதற்குரிய  எந்த ஒரு விதிமுறைகளையும் கருத்தில்கொள்ளாது, பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் சட்ட விரோதமாக இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் புத்தர் சிலை திறப்புவிழா தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு பிக்குமாரினால் இடையூறு விளைவிக்கப்பட்டிருந்தது. 

சிங்கள அரசினால் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கலின் ஒரு கட்டமாக, தொல்பொருள் திணைக்களம் ஊடாக இத்தகைய புத்தர் சிலை வைக்கும் செயற்பாடுகள் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...