முல்லைத்தீவிற்கு புத்தர் சிலையுடன் வந்த பிக்குகள், பின்புலத்தில் யார்?

முல்லைத்தீவிற்கு புத்தர் சிலையை நிறுவும் நோக்கில் வருகைதந்த சில பௌத்த பிக்குகளும், சில சிங்கள இளைஞர்களும் முல்லை மைந்தர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் புத்தர் சிலையை நிறுவும் நோக்கில் வந்த பௌத்த பிக்குகளே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

நான்கு வாகனங்களில் வந்த இவர்களை முல்லை மைந்தர்கள் வழிமறித்து திருப்பி அனுப்ப முற்பட்டபோது பிக்குகள் எவரும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடவில்லை என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Buddhist monks mullaitivu thannimurippu

இவர்கள் உண்மையாகவே நேற்றே புத்தர் சிலையை வைக்க வந்திருப்பார்களானால், வழிமறித்த இளைஞர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருப்பார்கள். இவர்களை தமிழர் பிரதேசங்களுக்கு அனுப்பி நோட்டம் விட்டது யார் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தமிழர் பிரதேசங்களில் அரசமரம் இருக்குமிடங்களில் சாதாரண புத்தர் சிலைகளை வைப்பது, பின்னர் இராணுவத்தினரின் உதவியுடன் சிறிய விகாரை அமைப்பது, இறுதியாக சூழ உள்ள இடங்களில் சிங்கள மக்களை குடியமர்த்துவது என்ற வழமையான பாணியில் சிங்கள அரச இயந்திரம் சிறப்பாக செயற்படுகின்றது என்பது மட்டுமே உண்மை.

Buddhist monks mullaitivu thannimurippu

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே உங்கள் பதில் என்ன?

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles