மருதனார்மடம் சந்தியில் வாள்வெட்டு, வேடிக்கை பார்த்த இராணுவம்

யாழ் மருதனார்மடம் சந்தியில் பழக்கடை வியாபாரி மீது மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். படுகாயமடைந்த வியாபாரி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் ஊரடங்கு நேரத்தில் இடம்பெற்றுள்ளது. அதேவேளை மருதனார்மடம் சந்தியில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் கடமையில் இருந்துள்ளனர். இருப்பினும் வாள் வெட்டில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றுள்ளார்கள். தாக்குதல் சம்பவம் முடிந்த பின்னர்தான் காவல்துறையின் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இரவு 7 மணிக்கு, அதுவும் ஊரடங்கு நேரத்தில் வாள்வெட்டு கும்பல் சுமூகமாக இயங்குகிறார்கள் என்றால், பின்னணியில் பெரும் அரசியல் சக்தி அல்லது இராணுவ சக்தி உள்ளமை மிகத் தெளிவாகத் தெரிகிறது.

யாழ் பாராளுமன்ற உறுப்பினர்களா, தென்னிலங்கை அரசியல் சக்தியா அல்லது இராணுவ புலனாய்வு பின்னணியா என்பதை, அரச தரப்பைச் சாராத யாழ் பாராளூமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles