ரணில் என்னையும் கெடுத்து, வடக்கு மக்களையும் ஏமாற்றிவிட்டார் – ஜனாதிபதி

மிக மோசமாக ஆட்சி நடத்திய ரணில், ஒரு கட்டத்தில் என்னையும் கெடுத்துவிட்டார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளையும் சீரழித்து, நாட்டினை மிக மோசமான நிலமைக்கு கொண்டு சென்றதால்தான், கடந்த 26ம் திகதி (26/10) நான் அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினேன் என தெரிவித்த ஜனாதிபதி, அவர் வடக்கு மக்களையும் ஏமாற்றி, தோட்ட தொழிலாளர்களையும் ஏமாற்றிவிட்டார் எனவும் குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் சம்பந்தமில்லாமல் ரணில் மீதான குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ஜனாதிபதி, தனது செயலால் சுதந்திரக் கட்சி தேய்ந்து, பொதுஜன பெரமுன வளர்ச்சியடைவது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பது இங்கு கவனிக்கவேண்டிய ஒரு விடயமாகும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles