தொடரும் மைத்திரியின் அராஜகம், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைநகலினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி நீக்கத்திற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடமால், தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு தொலைநகல் மூலமாக அவசரமாக பதவி நீக்கியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா.

இலங்கை தற்போது முகம்குடுத்துள்ள இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக தனது அதிகாரங்களை ஒழுங்காக பிரயோகிக்காத ஜனாதிபதி, தேவையற்ற விதத்தில் வடக்கு தமிழர்களை, குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களை சீண்டும் செயல்களில் ஈடுபட்டுவருகின்றமை பலத்த சந்தேகங்ககளை ஏற்படுத்துகின்றது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles