நடப்பு அரசாங்கத்தை எதிர்த்து கொழும்பு காலி முகத்திடலில் நடந்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழில் தீப்பந்தப் போராடம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனநாயகத்திற்காக ஒன்றினைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், முன்னாள் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
யாழ் பண்ணை பாலம் அருகே இரவு 7 மணியளவில் ஆரம்பமான தீப்பந்தப் போராட்ட பேரணியில் அரசாங்கத்திற்கு எதிராக பல கோசங்கள் எழுப்பட்டன.

