யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆனோல்ட் யாழ் மாநரக மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல்கள் விரைவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், பொருளாதார நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி, ஜனாதிபதியின் விஷேட அதிகாரத்தின் மூலம் தேர்தல்கள் இடம்பெறாமல் செய்யப்படலாம் எனும் ஐயமும் அரசியல் கட்சிகளிடையே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
