பிரதமரால் மட்டுவிலில் விசேட பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் யாழ் மட்டுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் நேற்று (20/03) திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 200 மில்லியன் ரூபாய் செல்வில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந் நிலையம், விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களுக்கு தகுந்த விலையினைப் பெற்றுக்கொள்ளவும், நுகர்வோர் மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களைப் பெற்றுக்கொள்ளவும் வசதியினை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

மட்டுவில் விசேட பொருளாதார நிலையத்திற்கு, பதுளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் யாழ் சந்தையிலிருந்து மரக்கறிகள் மற்றும் பழவகைகள் என்பன கிடைக்கப் பெறவுள்ளன.  

இந்நிகழ்வில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரச அதிபர் திரு.மகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles