கட்டுப்பாட்டை இழந்த யாழ்-கொழும்பு பேருந்து, மூவர் உயிரிழப்பு

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தினருகே பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற சொகுசு பேருந்து ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்துள்ளது. இதில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன், 16பேர் காயடமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் நால்வர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update : உயிரிழந்த மூவரில் ஒருவர் யாழ் பல்கலைகழகத்தில் சித்த மருத்துவம் பயிலும் நாவலப்பிட்டியைச் சேர்ந்தவ மாணவி ஆவார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles