சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30/08) இலங்கையின் வடக்கு, கிழக்கிலும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளாக சுழற்சி முறையில், கவனயீர்ப்பு மற்றும் உண்ணாவிரத போரட்டங்களை மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்து மாவட்ட செயலகம் (கச்சேரி) வரைக்கும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறும். இதேவேளை மட்டக்களப்பில், காலை 10 மணிக்கு கல்லடிப் பாலத்தில் ஆரம்பித்து காந்தி பூங்கா வரையிலும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறும்.