மன்னாரில் 111 நாளில் 256 மனித எலும்புக்கூடுகள்

இது திரைப் படமோ, கற்பனைக் கதையோ அல்லது வேறு ஒரு நாட்டில் இடம்பெற்ற செய்தியின் தலைப்போ இல்லை. இலங்கையின் வடமாகாணத்திலுள்ள மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு துயர சம்பவம்.

மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் நேற்றுவரை (05/12) ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என 256 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

111ஆவது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் இன்னும் எத்தனை மனித எச்சங்கள் வெளிவர இருக்கிறதோ என்ற அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது.

இருப்பினும், நமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில்-மைத்திரி போட்டியில் கவனம் செலுத்துவதால், மேற்குறித்த மனிதப்படுகொலை தொடர்பான விடயங்களை சர்வேதேசத்திற்கு கொண்டுசெல்லும் பணியினை யார்தான் செய்வார்களோ தெரியாது !!!

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles