காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க நேற்று (25/02) வடமாகாணம் எங்கும் பூரண ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டது.
வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா,முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் அரச திணைக்களங்கள், பாடசாலைகள் மற்றும் தனியார் வணிக சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை. வாகன போக்குவரத்து இன்றி வீதிகள் முற்றாக வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதேவேளை கிளிநொச்சியில் காலை ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியிருந்தனர்.

முன்னாள் வடமாகாண முதலமைச்சர், முன்னாள் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் மற்றும் மதத் தலைவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
