யாழ் மாவட்டத்தில் போதை மாத்திரைகளின் பாவனை மிக வேகமான அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மானிப்பாய் மற்றும் ஏழாலை பகுதிகளில் 2,200 இற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மானிப்பாயில் 1,400 மாத்திரைகளுடன் ஒருவரும், ஏழாலையில் 840 மாத்திரைகளுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவரிடையே போதை மாத்திரை பாவனை அதிகரித்துள்ளமையானது அவர்களது கல்வி நடவடிக்கைகளை பாரதூரமாக பாதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குற்றச் செயல்களை தடுக்க மக்கள் 1917 மற்றும் 1997 போன்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்