மீண்டும் அதே பல்லவி

அரசாங்கத்துடன் இணையாது, எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது என தமிழ்க் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

நேற்று (12/12) இலங்கை பாராளுமன்றில் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகள் எதுவுமின்றி, நாட்டின் நலன் கருதி ரணிலுக்கு ஆதரவு அளித்துள்ளதாக குறிப்பிட்ட சம்பந்தன், தாம் அரசாங்கத்துடன் இணையாது எதிர்க்கட்சியாக இருந்து, அமையவுள்ள அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் பாராளுமன்றம் சென்றுள்ள தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழர்களின் அபிவிருத்தியில் உடனடி கவனம் செலுத்தவேண்டிய தேவையுள்ளது. அதைவிடுத்து ‘அரசாங்கத்துடன் இணையாது, எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது’ என மீண்டும் அதே பல்லவியைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ரணில் மீண்டும் பதவிக்கு வந்தால், பிரதியுபகாரமாக தமிழர்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles