சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30/08) இலங்கையின் வடக்கு, கிழக்கில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதில் மட்டக்களப்பில் ஆரம்பமபான பேரணியை தடுக்க இலங்கை காவல்துறையினர் கடும் முயற்சி செய்தனர்.

நீதிமன்ற தடை உத்தரவினைப் பெற்று, கலகமடக்கும் காவல்துறையினரின் உதவியுடன் பேரணியைத் தடுக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மக்களின் கடும் எதிர்ப்பினால் காவல்துறையினரின் தடையை மீறி பேரணி இடம்பெற்றது.
விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுவார்கள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றினை காரணம் காட்டியும் பேரணிக்கு தடை உத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் மற்றும் சாணக்கியன் ஆகியோருடன், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேரணியில் பங்குபற்றியிருந்தனர்.